மேலும் செய்திகள்
திண்டுக்கல்லில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு
06-Dec-2024
பொள்ளாச்சி; மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., 37வது நினைவு தினம், பொள்ளாச்சி எம்.எல்.ஏ., அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது.அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர்., உருவப்படத்துக்கு, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நகர செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.* வால்பாறையில் அ.தி.மு.க., சார்பில் அனுஷ்டிக்கப்பட்டது.நகர செயலாளர் மயில்கணேஷ் தலைமையில், கட்சியினர், ரொட்டிக்கடையில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினர். தொழிற்சங்க தலைவர் அமீது, நகர துணை செயலாளர் பொன்கணேஷ், நகர் மன்ற கவுன்சிலர் மணிகண்டன், அவைத்தலைவர் சுடர்பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
06-Dec-2024