மேலும் செய்திகள்
பஞ்சலிங்கம் அருவிக்கு சுற்றுலா பயணியர் அனுமதி
18-Oct-2024
ஆனைமலை: ஆழியாறுக்கு, உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் சுற்றுலா பயணியர் அதிகளவு வருகின்றனர். அனைவரும் விரும்பி செல்லும் இடமாக, கவியருவி உள்ளது. இங்கு, குளித்து மகிழ சுற்றுலா பயணியர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.தொடர் மழை காரணமாக, கடந்த நான்கு நாட்களுக்கு முன் கவியிருவியல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். தற்போது, மழை குறைந்து நீர்வரத்து சீரானதால், தற்காலிகமாக தடை நீக்கப்பட்டு நேற்று முதல் சுற்றுலா பயணியர் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
18-Oct-2024