வாகை வீட்டுமனைகள் அசத்தலான சலுகை
கோவை : ரியல் எஸ்டேட் நிறுவனமான, 'பேர் பீல்டு ஷெல்டர்ஸ்' நிறுவனம், 'வாகை' எனும் பெயரில், தெலுங்குபாளையத்தில் லே-அவுட் அறிமுகம் செய்துள்ளது.கோவை 'நல்லறம்' அறக்கட்டளையின் தலைவர் அன்பரசன், அறிமுகம் செய்து வைத்தார். நடிகை சுஜிதா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அறிமுக சலுகையாக, இந்த லே-அவுட்டில் வீட்டுமனை வாங்கியோருக்கு, 8 கிராம் தங்க நாணயம் இலவசமாக வழங்கப்பட்டது. இச்சலுகை, அட்சய திருதியை வரை நீட்டிக்கப்பட உள்ளது.''வங்கிக் கடன் வசதியுடன், வீடு கட்டி குடியேற தயார் நிலையில் உள்ள லே-அவுட்டில், கண்காணிப்பு கேமரா, விசாலமான தார் சாலைகள், தண்ணீர், மின்சாரம், கழிவுநீர் வடிகால் என, அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. டீ.டி.சி.பி., மற்றும் 'ரெரா' அங்கீகாரம் பெற்றுள்ளது,'' என, பேர் பீல்டு ஷெல்டர்ஸ் நிர்வாக இயக்குனர் முத்துக்குமார் தெரிவித்தார்.டெக்னி கிராப்ட்ஸ் இயக்குனர் தங்கராஜ், மருத்துவர் குறிஞ்சிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.விபரங்களுக்கு: 79008 82288, 79008 83388.