அண்ணா பல்கலை கல்லுாரிகளுக்கு இடையேயான தடகளம் அமர்க்களம்
கோவை: அண்ணா பல்கலை கல்லுாரிகளுக்கு இடையேயான ஆண், பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள், கடந்த, 14ம் தேதி முதல் நடந்து வருகின்றன. இதில் பல்வேறு கல்லுாரியை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்று வருகின்றனர். தடகளம், மராத்தான் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்து வருகின்றன. பெண்களுக்கான 400 தொடர் ஓட்டப்போட்டியில், கோவை அரசு தொழில்நுட்பக் கல்லுாரி முதலிடம், அண்ணா பல்கலை இரண்டாம் இடம், ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரி மூன்றாம் இடம் பிடித்தன. பெண்களுக்கான, 800 மீ., ஓட்டப் போட்டியில் ஜி.சி.டி., மாணவியர், ஆர்த்திஸ்ரீ முதல் இடம், ரோஹினி மூன்றாம் இடம், அண்ணா பல்கலை மாணவி, மகேஸ்வரி இரண்டாம் இடம் பிடித்தனர். குண்டு எறிதல் போட்டியில், ஜி.சி.டி., மாணவி தனுசாவர்த்தினி, முதல் இடம், யுனைடெட் தொழில்நுட்பக் கல்லுாரி மாணவி ஸ்ரேயல் இரண்டாம் இடம், எஸ்.என்.எஸ்., தொழில்நுட்பக் கல்லுாரி மாணவி சம்யுக்தா மூன்றாம் இடம் பிடித்தனர். ஈட்டி எறிதல் போட்டியில் கே.ஜி.ஐ.எஸ்.எல்., மாணவி கிருத்திகா முதல் இடம், எஸ்.என்.எஸ்., கல்லுாரி மாணவி கவுசிகா இரண்டாம் இடம், ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரி மாணவி, சரண்யா மூன்றாம் இடம் பிடித்தனர். ஆண்கள் டெக்கத்தலான் போட்டியில், கே.ஜி.ஐ.எஸ்.எல்., மாணவர், சுபாஷ் முதலிடம், எஸ்.என்.எஸ்., இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர் ஜெய்பிரகாசம் இரண்டாம் இடம், யுனைடெட் தொழில்நுட்பக் கல்லுாரி மாணவர் திருலோகசந்துரு மூன்றாம் இடம் பிடித்தனர். ஆண்கள், 5000 மீ., ஓட்டத்தில் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லுாரி முதல் இடம், கே.ஜி.ஐ.எஸ்.எல்., கல்லுாரி இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்தது. ஆண்கள், 10 கி.மீ., நடைப்போட்டியில் அண்ணா பல்கலை மண்டல மையத்தின் மாணவர் சிவகுமார் முதல் இடம், கே.சி.டி.எம்., மாணவர் பாலசந்தர் இரண்டாம் இடம், கோவை அரசு தொழில்நுட்பக் கல்லுாரி மாணவர் அருண்குமார் மூன்றாம் இடம் பிடித்தனர். ஆண்கள், 800 மீ., ஓட்டப்போட்டியில் சி.எஸ்.ஐ., கல்லுாரி மாணவர் டிவின் ஜோனத்தன், பி.பி.ஜி., கல்லுாரி மாணவர் சந்தோஷ் பவன், ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர் தர்ஷன் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். ஆண்கள் 4 * 400 தொடர் ஓட்டப்போட்டியில், கே.சி.டி., முதல் இடம், ஜி.சி.டி., இரண்டாம் இடம், கே.ஜி.ஐ.எஸ்.எல்., மூன்றாம் இடம் பிடித்தன.