உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டாஸ்மாக் கடையில் அண்ணாமலை படம்; பா.ஜ.,வுக்கு தி.மு.க., எதிர்ப்பு 

டாஸ்மாக் கடையில் அண்ணாமலை படம்; பா.ஜ.,வுக்கு தி.மு.க., எதிர்ப்பு 

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரில், டாஸ்மாக் கடைகளில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் படத்துடன் போஸ்டரை ஒட்டி, தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்ததால், பரபரப்பு ஏற்பட்டது.தமிழகத்திலுள்ள டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு என்று கூறி, கடந்த இரு தினங்களுக்கு முன் போராட்டம் நடத்த முயன்ற, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, பின், விடுவிக்கப்பட்டனர்.இதையடுத்து, 'டாஸ்மாக் கடைகளில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ மாட்டப்படும்; போராட்டம் தேதி சொல்லாமல் நடத்தப்படும்,' என்றும் பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.அதன்பேரில், கோவை தெற்கு மாவட்டத்தில், பா.ஜ., மகளிரணி சார்பில் டாஸ்மாக் கடை ஒன்றில் முதல்வர் ஸ்டாலின் படம் ஒட்டப்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பொள்ளாச்சி நகரில், டாஸ்மாக் கடையின் முகப்பு பகுதியில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் போஸ்டரை ஒட்டி, தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.அந்த போஸ்டரில், 'இக்கடையில் தமிழக அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதல் விலைக்கு மதுவகைகள் விற்கப்படுவதில்லை,' என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. தி.மு.க.,வினரின் இந்த செயலால், இரு கட்சியினர் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.இந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகளிலேயே, பாட்டிலுக்கு 10 ரூபாயுடன், குவாட்டருக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதை கவனத்தில் கொள்ளாமல், தி.மு.க.,வினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 55 )

TRE
மார் 20, 2025 16:26

குடித்து விட்டு சாட்டையால் அடித்து கொள்ளயும் வலி தெரியாது இப்படிக்கு அண்ணாமலை


Ram pollachi
மார் 20, 2025 14:12

ஓம் பிரகாஷ் எதிர் புறம் உள்ள கடை இது. அண்ணாமலை படத்தை இரண்டு பக்க கதவில் ஒட்டி.. நியாமான விலை என்பதை பார்த்து கூடுதலாக பத்து ரூபாய் தரமாட்டோம் என்று குடிமக்கள் தர்ணா செய்ய தொடங்கி விட்டார்கள்... நிலைமையை உணர்ந்து இரண்டு ஜீப்களில் வந்த காவலர்கள் இனி இந்த போஸ்டர் இருந்தால் நம்ம பிழைப்பு அதோ கதிதான் என்று தூக்கி விட்டார்கள். பிறகு வழக்கம் போல் அநியாய விலையில் விற்பனை தொடங்கியது. டாஸ்மாக் விடுமுறை நாளிலும் இந்த கடை வாசல் முன்புறம் ஒரு லாரியை நிறுத்தி வைத்து காலை முதல் இரவு வரை தொழிலை நடத்துவார்கள் இது சென்ற ஆட்சியிலும், தற்போதைய ஆட்சியிலும் தொடர்கிறது....


Madras Madra
மார் 20, 2025 12:20

அண்ணாமலைக்கு இலவச விளம்பரம் ரொம்ப நல்லது


Anand
மார் 20, 2025 11:47

திமுக ஒரு கேடுகெட்ட கட்சி.


Rathinasabapathi Ramasamy
மார் 20, 2025 13:39

கொள்ளை கும்பல் கட்சி.


Rajathi Rajan
மார் 20, 2025 11:31

இந்த ஆண்டின் மிக சிறந்த புகைப்படம் இது தான்? இந்த படத்திற்கு போஸ் கொடுத்தவர்க்கு 2025ம் ஆண்டு மிக சிறந்த மொக்கை காமெடி பீஸ் என்ற காகித பட்டமும், இத்து போன துரு பிடித்த தகர பதக்கமும் வழங்க ஒன்ரிய அரசை கேட்டு கொள்கிறார்


RAMANATHAN
மார் 20, 2025 11:02

இவ்வளவு பேசும் திராவிட கட்சிகள் ரேஷன் கடையில் வாரத்துக்கு ரெண்டு முழு பாட்டில் பிரீயாக தருவதாக வாக்குறுதி தருவார்களா?


Shekar
மார் 20, 2025 10:35

லூசா நீங்க


Padmasridharan
மார் 20, 2025 10:28

குடிக்காமலேயே அரசியல் செய்யும் குடிமகன்களின் எடுத்துக்காட்டு படு அசிங்கமாக இருக்கிறது. TASMAC மூடுங்கய்யா


shyamnats
மார் 20, 2025 09:49

தி மு காவால் வைக்கப்படும் திரு அண்ணாமலை படங்கள், பா ஜ வுக்கான ஆதரவு செய்கையாகவே பார்க்கலாம். இப்பொழுதாவது குடிமக்கள், உள்ளே போகும் போது தெளிவடைய வேண்டுகிறோம். அம்மா மருந்தகங்களில் கூட திருவாளர்கள் மு க, சுடாலின் படங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. எனவே மாற்றாக, அணைத்து மதுக்கடைகளிலும் முன்னாள், மற்றும் இந்நாள் முதல்வர்கள் படங்கள் வைக்க பட வேண்டும்.


ramani
மார் 20, 2025 09:23

டாஸ்மாக் கடைகளை எதிர்க்கும் அண்ணாமலை படம் சரி டாஸ்மாக் ஓனர் சுடாலின் படம் மிக சரி


முக்கிய வீடியோ