உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சமூகநீதி விடுதிகளாக அறிவிப்பு; தி.மு.க.,வினர் கொண்டாட்டம்

சமூகநீதி விடுதிகளாக அறிவிப்பு; தி.மு.க.,வினர் கொண்டாட்டம்

பொள்ளாச்சி; பள்ளி, கல்லுாரிகள் விடுதிகள், 'சமூகநீதி விடுதிகளாக' அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து, தி.மு.க.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.தமிழகம் முழவதும் பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லுாரி விடுதிகள், இனி, 'சமூகநீதி விடுதிகள்' என்று அழைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, நகராட்சியில், 29 மற்றும், 30வது வார்டு தி.மு.க., சார்பில், கோட்டூர் ரோடு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. தெற்கு நகர பொறுப்பாளர் அமுதபாரதி தலைமை வகித்தார்.கவுன்சிலர் பெருமாள், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் சதீஷ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை