உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வருடாந்திர சந்திப்பு; 60 ஆண்டுகளாக பூரிப்பு.. மலரும் நினைவுடன் முன்னாள் மாணவர்கள்

வருடாந்திர சந்திப்பு; 60 ஆண்டுகளாக பூரிப்பு.. மலரும் நினைவுடன் முன்னாள் மாணவர்கள்

சூலுார்; பள்ளியில் 60 ஆண்டுகளுக்கு முன் படித்தாலும், ஆண்டுக்கு ஒரு முறை சந்தித்து, பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு, முன்னாள் மாணவர்கள் பூரிப்பு அடைந்தனர். சூலூர் அடுத்த லட்சுமி நாயக்கன்பாளையத்தில் உள்ள, எஸ்.ஆர்.என்.வி., பள்ளியில், 1965-66ம் கல்வியாண்டில், எஸ்.எஸ்.எல்.சி., படித்த மாணவ, மாணவியர், 60 ஆண்டுகள் முடிந்த பின்னரும் சந்திப்பை தவிர்ப்பதில்லை. கடந்த, சில ஆண்டுகளாக சந்திப்பு கூட்டங்களை நடத்தி வரும் முன்னாள் மாணவர்கள் பலரும், தற்போது, 75 முதல், 80 வயதை தொட்டவர்கள் ஆவர். சூலூர் அருகே உள்ள ஓட்டலில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நேற்று நடந்தது. பேரன், பேத்திகளோடு வந்திருந்த அவர்கள், ஒருவருக்கு ஒருவர் நலம் விசாரித்து கொண்டனர். 60 ஆண்டுகளுக்கு முன் பள்ளியில் நடந்த நிகழ்வுகளை பரிமாறி கொண்டனர். பள்ளி பருவம் என்பது மறக்க முடியாத அனுபவங்களை கொண்டது. முதல் நட்புகள் உருவாகும் இடம் பள்ளி. அங்கு , 60 ஆண்டுகளுக்கு முன் கிடைத்த நட்பை இன்றும் தொடர்வது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர்கள் அகம் மகிழ்ந்து கூறினர். பள்ளியின் தற்போதைய தலைமையாசிரியர் அம்பிகா, முன்னாள் மாணவர்களாகிய நட்பு, மற்றவர்களுக்கு எடுத்துகாட்டாக உள்ளது, என, பாராட்டினார்.ஏற்பாடுகளை சாந்தா மணி, ரத்தினம், சுப்பிரமணியம், முத்துசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர். பங்கேற்ற அனைவரும் நினைவு பரிசுகளை பெற்றுக்கொண்டு, பசுமை கலந்த நினைவுகளுடன் புறப்பட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ