மேலும் செய்திகள்
நுாறு சதவீதம் வருகை; மாணவர்களுக்கு பாராட்டு
27-Mar-2025
அன்னுார் ;கணித திறனறி தேர்வில், அன்னுாரைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர்.மாணவ, மாணவியரிடையே, அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தை வளர்க்க, பல்வேறு தேர்வுகள், கோவை மண்டல அறிவியல் மையம் சார்பில், நடத்தப்படுகிறது.கடந்த ஜனவரி மாதம், கோவை மண்டல அளவில், ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான கணித திறனறி தேர்வு நடந்தது. இதில் 5,000 மாணவ மாணவியர் தேர்வு எழுதினர். இதில் கோவை மண்டல அளவில், 188 பேர் தேர்ச்சி பெற்றனர். அ. குமாரபாளையம் நடுநிலைப் பள்ளியின் ஜெயகனிஷா, ஒட்டர்பாளையம் நடுநிலைப் பள்ளியின் அபினவ், வடக்கலூர் நடுநிலைப் பள்ளியின் தீபக்குமார் ஆகிய மூவர் தேர்ச்சி பெற்றனர். மூவருக்கும், பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசு வழங்கப்பட்டன. பரிசு பெற்ற மாணவ, மாணவியருக்கு, ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள், மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
27-Mar-2025