உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / துடியலூரில் அரவான் பண்டிகை துவக்கம்

துடியலூரில் அரவான் பண்டிகை துவக்கம்

பெ.நா.பாளையம் ; துடியலூரில் அரவான் பண்டிகை இம்மாதம், 22ம் தேதி துவங்குகிறது. அன்று காலை, 6:00 மணிக்கு செல்வ விநாயகர் கோவிலில் பூஜை நடக்கிறது. 23ம் தேதி மாலை, 4:30 மணிக்கு பொங்காளியம்மன் திருக்கோவிலில் கணபதி பூஜை, கலச பூஜை, கங்கணம் கட்டுதல் நடக்கிறது. 7:00 மணிக்கு தலைவர் வேலுசாமி இல்லத்தில் பூஜை நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு மங்கையம்மன் பூச்சாட்டுதல், 9:00 மணிக்கு பூசாரி ரங்கசாமி இல்லத்தில் அணி கூடை பூஜை, இரவு, 10:00 மணிக்கு அரவான் சுவாமிக்கு பூச்சாட்டுதல் நடக்கிறது. தொடர்ந்து, 30ம் தேதி இரவு, 9:00 மணிக்கு கம்பம் நடுதல் நிகழ்ச்சியும் அக்., 1ம் தேதி மங்கையம்மன் பொங்கல் திருவிழா, 7ம் தேதி அரவான் மலைக்கு செல்லுதல், 8ம் தேதி அரவான் சுவாமியை எதிர்கொண்டு அழைத்தல், நடக்கிறது. 9ம் தேதி காலை மஞ்சள் நீராடுதல், இரவு 9:00 மணிக்கு அரவான் சுவாமியை ஸ்ரீ ஆஞ்சநேயர் கண்டுபிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 10ம் தேதி காலை அரவான் அலங்கார பூஜை, அரவான் திருவீதி உலா, மதியம், 12:00 மணிக்கு பொங்காளியம்மன் கட்டு சாதம் எடுத்து வருதல், இரவு, 8:00 மணிக்கு அரவான் களப்பலி மேடை சேர்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 11ம் தேதி பொங்காளி அம்மன் கோவிலில் இருந்து இரவு ஸ்ரீ ராமர் பட ஊர்வலம் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அரவான் கோவில் திருவிழா குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ