உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குப்பை கொட்டுகிறார்களா.. ஆதாரம் கொடுத்தால் பரிசு

குப்பை கொட்டுகிறார்களா.. ஆதாரம் கொடுத்தால் பரிசு

கருமத்தம்பட்டி; கருமத்தம்பட்டி நகராட்சியில் பொது இடங்களில் குப்பை கொட்டுவோர் குறித்து ஆதாரங்களை தந்தால், ரொக்கப் பரிசு வழங்குவதாக, நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.கருமத்தம்பட்டி நகராட்சி பகுதிகளான ஊஞ்சப்பாளையம் பள்ளம், செந்தில் நகர், காமராஜர் காலனி ரோடு, நொய்யல் பாலத்தின் கரைகள், ராமாச்சியம்பாளையம் பள்ளத்தில் குப்பை மற்றும் கட்டட கழிவுகள் கொட்டுவது அதிகரித்தது. இதையடுத்து, அப்பகுதிகளை சுத்தம் செய்த நகராட்சி நிர்வாகம், அங்கு எச்சரிக்கை பலகைகளை வைத்துள்ளது. இதுகுறித்து நகராட்சி தலைவர் மனோகரன் கூறுகையில், ''நகராட்சியில் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு அவசியம். பொது இடங்களில் குப்பை மற்றும் கழிவுகளை கொட்டும் வாகனங்களின் பதிவெண்ணுடன் புகைப்படம் எடுத்து, 9629964466 என்ற எண்ணுக்கு , அனுப்புவர்களுக்கு, 500 ரூபாய் முதல், 2 ஆயிரத்து, 500 ரூபாய் வரை ரொக்கப் பரிசு வழங்க உள்ளோம். குப்பை கொட்டும் வாகனங்களை பறிமுதல் செய்து, அபராதம் விதிக்கவும் உள்ளோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ