உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாகன விற்பனையாளர் சங்க நிர்வாகிகள் தேர்வு

வாகன விற்பனையாளர் சங்க நிர்வாகிகள் தேர்வு

பொள்ளாச்சி; பொள்ளாச்சி தாலுகா வாகன விற்பனையாளர் மற்றும் ஆலோசகர் நலச்சங்க கூட்டம், சங்க நிர்வாகிகள் தேர்தல், மீனாட்சி சுந்தரேஸ்வரர் மஹாலில் நடந்தது. கூட்டத்தில், சங்க உறுப்பினர்கள், 180 பேர் பங்கேற்றனர்.இதையடுத்து, சங்க நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது. அதில், சங்க தலைவராக செந்தில்குமார், செயலாளராக ஜெயபிரகாஷ், பொருளாளராக அருண்ராஜா, துணைத்தலைவராக பிரபாகரன், துணை செயலாளராக சக்கரபாணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வானவர்கள், பொறுப்பேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு, சங்க உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை