தண்டு ரத்தக்கசிவு குறித்து விழிப்புணர்வு
கிணத்துக்கடவு: அமிர்தா வேளாண் கல்லூரி மாணவர்கள் வடசித்தூரில் போர்டாக்ஸ் கலவை தயாரிப்பு மற்றும் தண்டு ரத்தக்கசிவு நோய் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கிணத்துக்கடவு அமிர்தா வேளாண் கல்லூரி மாணவர்கள், ஊரக வேளாண் செயல்முறை பயிற்சி அனுபவத்திட்டத்தின் கீழ், வடசித்தூர் பகுதியில் ஊரக பகுப்பாய்வு செய்து வருகின்றனர். இதில், தென்னையில் பாதிப்பை ஏற்படுத்தும் முக்கிய பிரச்னையான தண்டு ரத்தக் கசிவு நோயை அடையாளம் கண்டு அதைத் தீர்க்கும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர். மேலும், தண்டு ரத்தக் கசிவு நோயின் அறிகுறிகள் காரணங்கள் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணை மேலாண்மை முறைகள் குறித்து விளக்கினர்.