உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒன்றிய அலுவலகத்தில் விழிப்புணர்வு கூட்டம்

ஒன்றிய அலுவலகத்தில் விழிப்புணர்வு கூட்டம்

அன்னுார்: அன்னுார் ஒன்றிய அலுவலகத்தில் எச்.ஐ.வி., விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் சார்பில், அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் காசநோய் விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. வட்டார வளர்ச்சி அலு வலர் (கிராம ஊராட்சி) ரவீந்திரன் தலைமை வகித்தார்.கூட்டத்தில் திட்ட ஆலோசகர் விஜய் பிரகாஷ் பேசுகையில், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் எச்.ஐ.வி., பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது. காச நோய்க்கு முழுமையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. எச்.ஐ.வி., எய்ட்ஸ் பரவுவது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும், என்றார்.கூட்டத்தில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஊராட்சி தலைவர்கள், செயலாளர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை