உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பி-டிவிஷன் கால்பந்து வீரர்கள் ஆக்ரோஷ ஆட்டம்

 பி-டிவிஷன் கால்பந்து வீரர்கள் ஆக்ரோஷ ஆட்டம்

கோவை, கோவை மாவட்ட கால்பந்து சங்கம்(சி.டி.எப்.ஏ.,) சார்பில் 'பி-டிவிஷன் லீக்' போட்டிகள் கடந்த, 13ம் தேதி துவங்கியது. நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் இப்போட்டியில், 11 அணிகள் பங்கேற்றுள்ளன. நேற்று முன்தினம், பிளட் ரெட் அணியும், அசோகா புட்பால் கிளப் அணியும் மோதின. பரபரப்பான ஆட்டத்தில், 3-2 என்ற கோல் கணக்கில் பிளட் ரெட் அணி வெற்றி பெற்றது. பேரூர் புட்பால் கிளப் அணியும், பி.ஏ.சி.ஏ.எஸ். அணியும் மோதியதில் 3-2 என்ற கோல் கணக்கில் பேரூர் கிளப் வென்றது. நேற்று சி.சி.எப்.ஏ., அணி, 4-0 என்ற கோல்களில் ஒலிம்பஸ் அணியையும், அசோகா புட்பால் கிளப் அணி, 3-0 என்ற கோல்களில் பெனிவலென்ஸ் அணியையும் வென்றன. சி.டி.எப்.ஏ. தலைவர் மதன் செந்தில், செயலாளர் அணில்குமார் போட்டிகளை நடத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை