உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ரோட்டை சீரமைக்க கோரி வாழை மரம் நடும் போராட்டம்

 ரோட்டை சீரமைக்க கோரி வாழை மரம் நடும் போராட்டம்

வால்பாறை: ரோட்டை சீரமைக்கக்கோரி தொழிற்சங்கங்கள் சார்பில், வாழைமரம் நடும் போராட்டம் நடந்தது.வால்பாறை அடுத்துள்ளது சோலையாறு எஸ்டேட். இங்குள்ள ஆர்ச் முதல் சித்தி விநாயகர் கோவில் வரையிலான இரண்டு கி.மீ., துாரம் உள்ள ரோடு, கடந்த பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த ரோட்டில் வாகனங்கள் செல்ல முடியாமல், வாகன ஓட்டுனர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். இந்நிலையில் குண்டும், குழியுமாக உள்ள இந்த ரோட்டை சீரமைக்கக்கோரி, தமிழ்நாடு தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில், மாநில தலைவர் அமீது தலைமையில் வாழை மரம் நடும் போராட்டம் நடந்தது. போராட்டத்தில், கூட்டுக்குழு துணைத்தலைவர் வீரமணி, செயலாளர் கருப்பையா, பொருளாளர் மோகன், கூட்டுக்குழு துணை செயலாளர் வர்க்கீஸ், தங்கவேல், செந்தில்முருகன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் சோலையாறு எஸ்டேட் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக சோலையாறு ரோட்டை சீரமைக்க கோரி, எஸ்டேட் தொழிற்சாலையின் முன்புறம் உள்ள ரோட்டில் வாழை மரத்துடன் ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டுக்குழு தலைவர் அமீது பேசுகையில், ''சோலையாறு எஸ்டேட் ரோட்டை தொழிலாளர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் நலன் கருதி விரைவில் சீரமைக்க வேண்டும். மேற்படி ரோட்டை தனியார் எஸ்டேட் நிர்வாகம் சீரமைக்காவிட்டால், உடனடியாக நகராட்சி வசம் ரோட்டை ஒப்படைக்க வேண்டும். ஒரு மாத காலத்திற்குள் ரோட்டை சீரமைக்காவிட்டால் அடுத்த கட்டமாக ஒட்டு மொத்த தொழிலாளர்களை திரட்டி விரைவில் போராட்டம் நடத்தப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ