உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வங்கி சேவை குறைபாடு: முதியவருக்கு இழப்பீடு

வங்கி சேவை குறைபாடு: முதியவருக்கு இழப்பீடு

கோவை;வங்கி சேவை குறைபாடு செய்ததால், முதியவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.கோவை, வடவள்ளியை சேர்ந்த ராமச்சந்திரன், 73 என்பவர், அங்குள்ள பாரத ஸ்டேட் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தார். இவரது கணக்கில், 11,000 ரூபாய் இருப்பு இருந்தது. இந்நிலையில், கிரெடிட் கார்டு சம்பந்தமாக, 500 ரூபாய்க்கான காசோலையை வங்கியில் கொடுத்துள்ளார். காசோலை திரும்ப வந்தது. ஏ.டி.எம்., வாயிலாகவும், ராமச்சந்திரனால் பணம் எடுக்க முடியவில்லை. வங்கி நிர்வாகத்திடம் கேட்டபோது, வாடிக்கையாளரை அறிந்து கொள்வது தொடர்பாக, கே.ஒய்.சி., எனப்படும் விண்ணப்பத்தை, வங்கியில் சமர்ப்பிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதனால் வங்கி கணக்கில், அவரால் தொடர்ந்து வரவு- செலவு வைக்க முடியாமல் போனது. இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல், வங்கி நிர்வாகம் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரருக்கு இழப்பீடாக, 10,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி