உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொங்கல் பண்டிகை முன்னிட்டு கோவை குற்றாலத்தில் குளியல்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு கோவை குற்றாலத்தில் குளியல்

தொண்டாமுத்தூர்;கோவை குற்றாலத்தில், பொங்கல் பண்டிகை விடுமுறையொட்டி, ஒரே நாளில், 2,847 பேர் திரண்டனர்.போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்நீர்வீழ்ச்சிக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.பொங்கல் பண்டிகை விடுமுறை தினமான நேற்று, காலை முதலே, கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சிக்கு, சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.சோதனை சாவடியில் உள்ள டிக்கெட் கவுன்டரில், நுழைவு சீட்டு வாங்க நீண்ட வரிசையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர். பொங்கல் பண்டிகை தினமான நேற்று, பெரியவர்கள், 2,470 பேரும், சிறியவர்கள், 377 பேரும் என, மொத்தம், 2,847 பேர் வந்து, கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர். இதன் மூலம் நேற்று ஒரு நாள் மட்டும், வனத்துறைக்கு, 1.75 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை