பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழா
கோவை; கோவை, பழைய சுங்கம், தியாகி சிவராம் நகரிலுள்ள பத்ரகாளியம்மன் கோவிலின், 43ம் ஆண்டு திருவிழா மற்றும் நான்காம் ஆண்டு குண்டம் விழா கடந்த, 5ல் கொடியேற்றுதல், கணபதி ஹோமம், தீர்த்தம் எடுத்து வருதலுடன் துவங்கியது. குண்டம் இறங்குதல் நடந்தது. நேற்று முன்தினம் அன்னதானம் நடந்தது. இன்று இரவு 7:00 முதல் 8:00 மணிக்குள் மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.