உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பாரதியார் பல்கலை கபடி போட்டி : என்.ஜி.எம். கல்லுாரி 2ம் இடம்

 பாரதியார் பல்கலை கபடி போட்டி : என்.ஜி.எம். கல்லுாரி 2ம் இடம்

பொள்ளாச்சி: பாரதியார் பல்கலை கபடி போட்டியில், என்.ஜி.எம். கல்லுாரி, இரண்டாமிடம் பெற்றது. என்.ஜி.எம். கல்லுாரியில், பாரதியார் பல்கலை பெண்கள் கபடி போட்டி நடந்தது. கல்லுாரி முதல்வர் மாணிக்க செழியன், கல்லுாரி மேலாளர் ரகுநாதன், மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி, மாவட்ட கபடி சங்க தலைவர் தண்டபாணி ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர். இதில், எட்டு அணிகள் பங்கேற்றன. 'நாக் அவுட்' முறையில் நான்கு அணி லீக் சுற்றுக்கு முன்னேறின. பி.கே.ஆர். மற்றும் குமரகுரு கல்லுாரி அணிகள் மோதின. அதில், 49 - 24 என்ற புள்ளி வித்தியாசத்தில், பி.கே.ஆர். அணி வெற்றி பெற்றது. அடுத்த போட்டி, என்.ஜி.எம். மற்றும் ரத்தினம் கல்லுாரிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில், 45 - 36 புள்ளி வித்தியாசத்தில் என்.ஜி.எம். கல்லுாரி வெற்றி பெற்றது.ரத்தினம், பி.கே.ஆர். கல்லுாரிகளுக்கு இடையே நடந்தது. அதில், 51 -36 புள்ளி வித்தியாசத்தில், பி.கே.ஆர். கல்லுாரி வெற்றி பெற்றது. ரத்தினம், குமரகுரு கல்லுாரிகளுக்கு இடையே நடந்த போட்டியில், 47 - 34 புள்ளிகள் வித்தியாசத்தில் ரத்தினம் கல்லுாரி அணி வெற்றி பெற்றது.இறுதி போட்டியில் என்.ஜி.எம். கல்லுாரி, பி.கே.ஆர். கல்லுாரி அணிகள் மோதின. அதில், 33 - 36 என்ற புள்ளி வித்தியாசத்தில் பி.கே.ஆர். அணி முதலிடம் பெற்றது. என்.ஜி.எம். கல்லுாரி இரண்டாமிடம் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கல்லுாரியின் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர், கல்லுாரி முதல்வர் மாணிக்க செழியன், மாணவர் நலத்துறை அதிகாரி முத்துக்குமரன், பாரதியார் பல்கலை உடற்கல்வித்துறை அண்ணாதுரை ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை