உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தென் மேற்கு மண்டல பளு துாக்கும் போட்டி தேசிய போட்டிக்கு பாரதியார் பல்கலை தேர்வு

தென் மேற்கு மண்டல பளு துாக்கும் போட்டி தேசிய போட்டிக்கு பாரதியார் பல்கலை தேர்வு

கோவை : ஆந்திராவில் நடந்த பளு துாக்கும் போட்டியில், வெற்றி பெற்ற பாரதியார் பல்கலை அணியினர், 9 பேர் தேசியளவில் விளையாட உள்ளனர்.ஆந்திர மாநிலம், குண்டூரில் உள்ள ஆச்சார்யா நாகர்ஜூனா பல்கலையில் தென் மேற்கு மண்டல பல்கலைகளுக்கு இடையேயான பளு துாக்குதல் போட்டி, மூன்று நாட்கள் நடந்தது. இதில் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளிலும் முதல், 16 இடங்களை பிடித்தவர்கள் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.அதன்படி, 45 கிலோ எடை பிரிவில், பாரதியார் பல்கலை அணியில் பங்கேற்ற மாணவி ஜீவிதா, 14வது இடமும், 49 கிலோ எடை பிரிவில் இலக்கியா எட்டாம் இடமும், 59 கிலோ பிரிவில் கன்னிகாஸ்ரீ இரண்டாம் இடமும், 71 கிலோ பிரிவில் மோனிலா ஆறாம் இடமும், 81 கிலோ பிரிவில் சுபிக் ஷா மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.ஆண்களுக்கான, 55 கிலோ எடை பிரிவில், பிரவீன் எட்டாம் இடமும், 61 கிலோ பிரிவில் சச்சின், 14ம் இடமும், 81 கிலோ பிரிவில் மதன்குமார், 7ம் இடமும், 96 கிலோ பிரிவில் பத்மநாதன், 7ம் இடமும் பிடித்து, தேசிய போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை