உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளிகளில் பாரதியார் பிறந்தநாள் விழா

பள்ளிகளில் பாரதியார் பிறந்தநாள் விழா

பொள்ளாச்சி; பாரதியாரின், 143வது பிறந்தநாள் விழா, பொள்ளாச்சியில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் கொண்டாடப்பட்டது.* பொள்ளாச்சி அருகே, கோடங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் தினகரன் தலைமை வகித்தார். பாரதியாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. ஆசிரியர் சத்தியா, பாரதியாரின் தமிழ்மொழி பற்று, வாழ்க்கை வரலாறு, கருத்து மிக்க பாடல்கள் குறித்து மாணவ, மாணவியரிடையே பேசினார்.* பொள்ளாச்சி சேவாலயம் அறக்கட்டளை சார்பில், சூளேஸ்வரன்பட்டி பாரதி நுாலகத்தில், பாரதியாரின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அறக்கட்டளை செயலாளர் ஞானசேகர் தலைமை வகித்து, பாரதியாரின் கவிதைகள் அவரது வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய சம்பவங்கள் குறித்து பேசினார். சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்ட பாரதியார் கவிதைகள் பற்றி தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர் முஸ்தபா, அப்துல்ஹமீத், குணசேகரன் மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.* ஜமீன் கோட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடந்த விழாவில், தலைமையாசிரியர் அமலாராணி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக சமத்துார் கிளை நுாலகர் ரமேஷ், பொள்ளாச்சி கிளை நுாலகர் ஆனந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், பாரதியாரின் பாடல்கள், வாழ்க்கை வரலாறு குறித்து, மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.* கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாரதியாரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஆசிரியர்கள், பாரதியாரின் பெருமை மற்றும் சிறப்புகளை மாணவ, மாணவியர் இடையே பேசினர். கட்டுரை, பேச்சு, மாறுவேடம் உள்ளிட்ட போட்டிகளும், கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. பள்ளித் தாளாளர் மாரிமுத்து, பள்ளிச் செயலாளர் ரவிச்சந்திரன், முதல்வர் பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.* 'ஹார்ட் புல் நெஸ்' தியான மையம் சார்பில், மாக்கினாம்பட்டி ஆசிரமத்தில் பாரதியார் பிறந்தநாள் விழா நடந்தது. விழாவில், மாணவ, மாணவியர், பெண்கள் என, பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, நடனம், கவிதை, பேச்சு, மாறுவேடம் மற்றும் ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ