உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திறந்தவெளி அரங்கம் கட்ட பூமி பூஜை

திறந்தவெளி அரங்கம் கட்ட பூமி பூஜை

கருமத்தம்பட்டி; கருமத்தம்பட்டி அடுத்த வாகராயம்பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இங்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு, ராக், சி.ஆர்.எஸ் அமைப்புகள் மற்றும் சி.ஆர்.ஐ., பம்ஸ் நிறுவனம் சார்பில், 50 லட்சம் ரூபாய் செலவில், திறந்த வெளி அரங்கம் கட்ட முடிவு செய்யப்பட்டது. நேற்று காலை, பள்ளி வளாகத்தில், கட்டுமான பணிக்கான பூமி பூஜை நடந்தது. விருந்தினர்களை தலைமையாசிரியர் செந்தில்குமார் வரவேற்றார்.சி.ஆர்.ஐ., பம்ஸ் சேர்மன் சவுந்தர்ராஜன், மோப்பிரிபாளையம் பேரூராட்சி தலைவர் சசிக்குமார், பாலசுந்தரம் ஆகியோர் பணிகளை துவக்கி வைத்தனர். தொடர்ந்து மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர் தங்கவேல் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ