நிர்வாகிகளிடம் வாழ்த்து பெற்ற பா.ஜ., மாவட்ட தலைவர்
அன்னுார்; புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ., மாவட்ட தலைவர், மூத்த நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார்.தமிழக பா.ஜ.,வில் கடந்த டிசம்பர் மாதம் கிளை நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. தற்போது ஒன்றிய தலைவர் மற்றும் மாவட்டத் தலைவர் தேர்தல் நடைபெற்று வருகிறது.இதில் மேட்டுப்பாளையம், அவிநாசி, சூலூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் அடங்கிய கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவராக மாரிமுத்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாவட்ட தலைவர் மாரிமுத்து, புதிதாக பொறுப்பேற்றதையடுத்து கட்சி நிர்வாகிகளை நேற்று சந்தித்தார். கெம்பநாயக்கன்பாளையம், சாலையூர், அன்னுார், அ.மேட்டுப்பாளையம், பசூர் ஆகிய பகுதிகளில் பா.ஜ., மூத்த உறுப்பினர்கள், முன்னாள் நிர்வாகிகள், மூத்த நிர்வாகிகள் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.மாவட்ட தலைவருக்கு நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் திருமூர்த்தி, முன்னாள் நிர்வாகிகள் ஜெயபால், விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.