உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பா.ஜ. ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம்

பா.ஜ. ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், பா.ஜ. ஓட்டுச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். சட்டசபை பொறுப்பாளர் கிருஷ்ணசாமி, சட்டசபை அமைப்பாளர் துரை, இணை அமைப்பாளர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் மோகன் மந்தராசலம், ஓட்டுச்சாவடி முகவர்களின் பணிகள் குறித்து விளக்கி பேசினார்.சட்டசபை பி.எல்.ஏ. பொறுப்பாளர் செல்வக்குமார், நகர தலைவர் கோகுல்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதில், வாக்காளர் பட்டியல் கணக்கீட்டு படிவம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இப்பணிகளை முறையாக கண்காணிக்க வேண்டும். வாக்காளர்கள் முறையாக சேர்க்கப்படுகின்றனரா என கவனிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை