உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பா.ஜ. ஒருங்கிணைந்த கிளைகளின் கூட்டம்

பா.ஜ. ஒருங்கிணைந்த கிளைகளின் கூட்டம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, கோவில்பாளையம் - காளியண்ணன்புதுார் ஊராட்சியின் பா.ஜ. ஒருங்கிணைந்த கிளைகளின், 100வது வாராந்திர கிளை கூட்டம், கோவில்பாளையம் தனியார் ேஹாட்டலில் நடந்தது. இதில், துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்று, முதல் முறையாக கோவை, திருப்பூருக்கு வந்த துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பிரதமர் மோடியை கொல்ல சதி செய்த அமெரிக்காவின் சி.ஐ.ஏ.வையும், அமெரிக்கா அரசுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். சங்கத்தின் நுாற்றாண்டை முன்னிட்டு கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளையும், 'வீட்டு தொடர்பு' என்ற நிகழ்ச்சி வாயிலாக தொடர்பு கொண்டு, ஆர்.எஸ்.எஸ். கொள்கைகள், நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வாறு உறுதுணையாக உள்ளது என்பது குறித்தும், சமுதாய ஒருங்கிணைப்பில் பங்களிப்பு குறித்து விளக்க தீர்மானிக்கப்பட்டது. இத்தகவலை பா.ஜ. கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் தனபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை