உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பா.ஜ. மகளிர் அணி; தேசியக்கொடி பேரணி

பா.ஜ. மகளிர் அணி; தேசியக்கொடி பேரணி

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு பா.ஜ. மகளிர் அணி சார்பில் தேசியக்கொடி பேரணியானது, கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்ட் முதல் செக்போஸ்ட் வரை நடந்தது. இதில், நூற்றுக்கணக்கான பெண்கள் கைகளில் தேசியக் கொடியை ஏந்திய படி 'பாரத் மாதா கி ஜே' என கோசங்கள் எழுப்பி சென்றனர். பா.ஜ. கோவை தெற்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் அருணாதேவி, கோவை தெற்கு மாவட்ட தலைவர் சந்திரசேகர், முன்னாள் மாவட்ட தலைவர் வசந்தராஜன், கோவை தெற்கு மாவட்ட செயலாளர் மகேஷ்குமார், கிணத்துக்கடவு ஒன்றிய தலைவர் சதீஷ்குமார் மற்றும் பா.ஜ.வினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை