உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தி.மு.க., இளைஞரணி சார்பில் ரத்த தான முகாம்

 தி.மு.க., இளைஞரணி சார்பில் ரத்த தான முகாம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், துணை முதல்வர் பிறந்த நாளையொட்டி, தி.மு.க., ரத்த தான முகாம் நடந்தது. கோவை தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில், துணை முதல்வர் உதயநிதியின், 48வது பிறந்த நாளையொட்டி ரத்ததான முகாம், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நடந்தது. மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். கழக சட்ட திட்ட திருத்தக்குழு உறுப்பினர் செல்வராஜ் முகாமினை துவக்கி வைத்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சபரிகார்த்திக்கேயன் வரவேற்றார். நகர பொறுப்பாளர்கள் நவநீதகிருஷ்ணன், அமுதபாரதி, நகராட்சி துணை தலைவர் கவுதமன், கவுன்சிலர் மணிமாலா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணிமாறன் செய்து இருந்தார். மொத்தம், 65 பேர் ரத்த தானம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி