உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளிகளுக்கு புத்தகம் விநியோகம்

பள்ளிகளுக்கு புத்தகம் விநியோகம்

அன்னுார்; அன்னுார் ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் வினியோகம் நேற்று நடந்தது. அன்னுார் ஒன்றியத்தில், 73 அரசு துவக்கப் பள்ளிகளும், மூன்று அரசு உதவி பெறும் துவக்க பள்ளிகளும், 15 நடுநிலைப் பள்ளிகளும் என 91 பள்ளிகள் உள்ளன.இப்பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு வருகிற 2ம் தேதி செயல்பட துவங்க உள்ளன. இதையடுத்து அரசு அனைத்து ஒன்றியங்களுக்கும், பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுக்களை விநியோகித்துள்ளது.அன்னுார் வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்தில், கடந்த இரண்டு நாட்களாக பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி நடந்து வருகிறது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பாட புத்தகங்கள், நோட்டுகள் விநியோகிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை