மேலும் செய்திகள்
வீட்டு பூட்டை உடைத்து 12 சவரன் நகை திருட்டு
11-Oct-2024
கோவில்பாளையம், : காளப்பட்டியில் ஒரே வீட்டில் இரு தளங்களில் பத்து லட்சம் ரூபாய் மதிப்பில் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் திருட்டுப் போனது.காளப்பட்டி, பெரிய விநாயகர் நகரைச் சேர்ந்தவர் உமா சங்கர், 47. தனியார் நிறுவன மேலாளர். இவர் கடந்த 18ம் தேதி காலை வீட்டை பூட்டி விட்டு வேலைக்குச் சென்றார். மாலையில் அவரது மகள் வந்து பார்த்தபோது முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் ரொக்கம் திருட்டுப் போயிருந்தது. இதே வீட்டின் முதல் தளத்தில் உள்ள வீட்டில் வசிப்பவர் சிவசங்கர், 34. இவர் சொந்த வேலை காரணமாக நேற்று முன்தினம் மதியம் வீட்டை பூட்டி விட்டு சென்றார்.மாலையில் வந்து பார்த்தபோது வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. சோதனை செய்து பார்த்ததில் ஏழரை சவரன் நகைகளும், 35 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் திருட்டு போனது தெரிய வந்தது.சம்பவ இடத்தில் கருமத்தம்பட்டி டி.எஸ்.பி., தங்கராமன் விசாரித்தார். தடயவியல் நிபுணர்கள் கைரேகைகளை பதிவு செய்தனர். இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
11-Oct-2024