லாரியில் மோதி பஸ் சேதம்; காயமின்றி தப்பிய பயணியர்
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, அம்பராம்பாளையத்தில் முன் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால், அரசு பஸ் மோதியதில் கண்ணாடி உடைந்தது.பொள்ளாச்சியில் இருந்து சேத்துமடைக்கு, 25க்கும் மேற்பட்ட பயணியருடன் அரசு பஸ் சென்றது. பஸ்சின் முன்பாக, பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலைக்கு தேங்காய் ஏற்றுவதற்காக லாரி சென்றது.அம்பராம்பாளையம் அருகே சென்ற போது, வேகத்தடை இருந்ததால், லாரி டிரைவர் பிரேக் பிடித்து வேகத்தை குறைத்துள்ளார். அப்போது, எதிர்பாரதவிதமாக லாரியின் பின்பக்கம் மோதியதில், பஸ்சின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்தது.அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.