| ADDED : நவ 22, 2025 07:15 AM
கோவை: பொள்ளாச்சி அருகேயுள்ள வேட்டைகாரன்புதுாரை சேர்ந்தவர் துரைசாமி. மேட்டுப்பாளையம் ரோட்டிலுள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றினார். 2021, மே 5ல், சின்னியம்பாளையம் பிரிவு, நடுப்பட்டி அருகே பஸ்சை ஓட்டி சென்ற போது, பைக் மீது மோதி விபத்துள்ளானது. பைக்கில் வந்த நபர் உயிரிழந்தார். துரைசாமி பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, இடைநீக்க உத்தரவு ரத்து செய்யபட்டது. இடைநீக்கம் செய்யப்பட்ட, 105 நாட்களுக்கு வாழ்வாதார உதவி தொகை வழங்க கோரி, அரசு போக்குவரத்து கழகத்திற்கு விண்ணப்பித்தார். 75 நாட்களுக்கு மட்டுமே உதவி தொகை வழங்கப்பட்டது. நிலுவை வாழ்வாதார தொகை 32,157 ரூபாய் வழங்க உத்தரவிடக்கோரி, கோவை கூடுதல் லேபர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். கோர்ட் உத்தரவிட்டும் நிலுவை தொகை வழங்க தவறியதால், அதே கோர்ட்டில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்பேரில், கோவை ரயில்வே ஸ்டேஷன் அருகில் நிறுத்தப்பட்டிருந்த (தடம் எண்:11 )அரசு பஸ் நேற்று ஜப்தி செய்யப்பட்டது.