மேலும் செய்திகள்
100 சதவீத மானியத்தில் காய்கறி விதை வினியோகம்
14-Jul-2025
சூலுார்; 'ஊட்டச்சத்து வேளாண் இயக்க திட்டத்தின் கீழ், காய்கறி விதை தொகுப்பு, பழ செடி தொகுப்பு பெற, விண்ணப்பிக்கலாம்,' என, தோட்டக்கலைத்துறை அழைப்பு விடுத்துள்ளது. தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் என்ற புதிய திட்டம் கடந்த, 4 ம் தேதி துவங்கியுள்ளது.இத்திட்டத்தின் கீழ், தக்காளி, கத்திரி, மிளகாய், வெண்டை, கொத்தவரை மற்றும் கீரை விதைகள் அடங்கிய காய்கறி விதை தொகுப்புகள் வழங்கப்பட உள்ளன.பப்பாளி, கொய்யா, எலுமிச்சை உள்ளடங்கிய பழ செடி தொகுப்பும் விவசாயிகளுக்கு , 100 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சூலுார் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஷர்மிளா கூறியதாவது:காய்கறி விதை மற்றும் பழச்செடி தொகுப்பு பெற விரும்பும் விவசாயிகள், பொதுமக்கள் தங்கள் ஆதார் நகலுடன், சூலுார் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம். 0422 2990014 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். https://tnhorticulture.tn.gov.inஎன்ற இணையதளத்திலும் முன்பதிவு செய்து கொள்ளலாம். பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
14-Jul-2025