உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரத்த தானம் செய்ய அழைப்பு

ரத்த தானம் செய்ய அழைப்பு

அன்னூர்:அன்னூரில் இன்று நடைபெற உள்ள, ரத்த தான முகாமில் பங்கேற்க, சங்க நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.அன்னூரில், இன்று காலை 10:00 மணிக்கு, ரத்ததான முகாம் மற்றும் இலவச பொது மருத்துவ முகாம் தாசபளஞ்சிக திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.இந்த முகாமில், 18 வயது முதல் 55 வயது வரை உள்ள, ஆரோக்கியமான இருபாலரும் ரத்ததானம் செய்யலாம். ரத்த தானம் செய்வதால், உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. 48 மணி நேரத்தில், ரத்தம் மீண்டும் ஊறி விடும்.சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளும், இலவசமாக செய்யப்படுகிறது. முகாமில் பங்கேற்று ரத்ததானம் செய்து, இலவச பொது மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம் என, தென்னிந்திய தாசபளஞ்சிக மாதர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்