உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  வேலையுடன் ஊக்கத்தொகை பயன்படுத்திக்கொள்ள அழைப்பு

 வேலையுடன் ஊக்கத்தொகை பயன்படுத்திக்கொள்ள அழைப்பு

கோவை: கோவை சின்னவேடம்பட்டி தொழில்துறை சங்க (சியா) பி.எப்., விழிப்புணர்வு சிறப்புக் கூட்டம், தலைவர் தேவகுமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், கோவை மண்டல பி.எப்., கமிஷனர் (1) பிரசாந்த் 'பிரதான் மந்திரி விக்ஷித் பாரத் ரோஸ்கர் யோஜனா' குறித்து விளக்கினார். அவர் பேசியதாவது: மத்திய அரசு, வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. பி.எம்.வி.பி.ஆர்.ஒய்., என்ற இத்திட்டத்தின் கீழ், தொழில் நிறுவனங்களில் புதிதாக சேர்க்கப்படும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் பி.எப்., தொகையில், ஒரு பகுதியை அரசு நேரடியாக ஏற்றுக்கொண்டு வழங்கும். இதனால், நிறுவனங்களின் பி.எப்., செலவினம் குறையும். புதிய ஊழியர்களை நியமிக்க, குறு, சிறு நிறுவனங்கள் ஊக்கம் பெறும். ஊழியர்களுக்கும் சமூக பாதுகாப்பு அதிகரிக்கும். அரசு வழங்கும் இந்த ஊக்கத்தொகையால், எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களின் வளர்ச்சி, திறன்மிகு பணியாளர்கள் உருவாக்கம், வேலைவாய்ப்பு அதிகரித்து என, வளர்ந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி முன்னேறுவதற்கான அனைத்து சூழல்களும் உருவாகும். இத்திட்டத்தை தொழில்முனைவோர் சரியாக பயன்படுத்தி, தொழில்வளர்ச்சியை அடைய வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். சியா துணைத் தலைவர் ஜெயக்குமார், செயலாளர் கணேஷ் குமார் உட்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை