| ADDED : டிச 28, 2025 05:01 AM
கோவை: கோவை மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியல், 19ல் வெளியிடப்பட்டது. தொகுதி வாரியாக இப்பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் வைக்கப்பட்டுள்ளன. 1,062 மையங்களில் 3,563 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஓட்டுச்சாவடிகளில் நேற்று சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன. வாக்காளர் பட்டியலுடன் இருந்த தேர்தல் அலுவலர்கள், பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். பலரும் தங்களது பெயர் பட்டியலில் இருக்கிறதா என்பதை சரிபார்த்தனர். தேவையானவர்களுக்கு படிவம்-6, படிவம்-8 வழங்கினர். ஆன்-லைன் முறையிலும் பெயர் இணைக்க விண்ணப்பித்துக் கொடுத்தனர். கவுண்டம்பாளையம் தொகுதியில் துடியலுார் வித்ய விகாசினி மெட்ரிக் பள்ளி, அப்பநாயக்கன்பாளையம், துடியலுார், சரவணம்பட்டி, நேருநகr மாநகராட்சி பள்ளிகளில் முகாம்களை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தார். வடக்கு கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், வடக்கு மண்டல உதவி கமிஷனர் மகேஷ் கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் முருகன் உடனிருந்தனர். முகாம் இன்றும் (28ம் தேதி) நடைபெறும்.