| ADDED : நவ 26, 2025 05:32 AM
பொள்ளாச்சி: கிணத்துக்கடவு தொகுதியில், கோவை புறநகர் மாவட்ட ஜெ. பேரவை சார்பில், திண்ணை பிரசாரம் நடந்தது. கிணத்துக்கடவு தொகுதி எட்டிமடையில், கோவை புறநகர் மாவட்ட ஜெ. பேரவை சார்பில் திண்ணை பிரசாரம் நடந்தது. மாவட்ட செயலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ. தாமோதரன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வினியோகித்து தி.மு.க . அரசின் அவலங்களை பட்டியலிட்டு பேசினார். மின்கட்டணம், வரி உயர்வால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் இதற்கெல்லாம் தீர்வு காணப்படும் என எம்.எல்.ஏ. தெரிவித்தார். மேலும், அ.தி.மு.க. ஆட்சியில், செயல்படுத்திய நலத்திட்டங்கள் குறித்து விளக்கினார்.மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், நிறுத்தப்பட்டுள்ள மக்கள் நலத்திட்டங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என, பொதுமக்களிடம் தெரிவித்து எம்.எல்.ஏ., பிரசாரம் செய்தார். ஜெ.பேரவை நிர் வாகிகள், ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.