உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  லஞ்ச வழக்கில் விடுதலையானவரை துறை ரீதியாக விடுவிக்க முடியுமா?

 லஞ்ச வழக்கில் விடுதலையானவரை துறை ரீதியாக விடுவிக்க முடியுமா?

லஞ்சம் பெற்ற வழக்கில் விடுதலை செய்யப்பட்ட நபரை: விடுவிக்க முடியாது. லஞ்சம் பெற்ற வழக்கில், போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் தண்டடையும், நிருபிக்கப்படாத பட்சத்தில் விடுதலை செய்யப்படுகின்றனர். ஆனால் துறை ரீதியான விசாரணை முற்றிலும் மாறுபட்டது. இங்கு இந்திய சாட்சிய சட்டம் பொருந்தாது. உள்விசாரணை நிகழ்வுகளின் அடிப்படையில் நடைபெறும். போலீசார் தாக்கல் செய்த வழக்கில், குற்றவாளி இல்லை என்று நீதிமன்றம் முடிவு செய்தாலும், துறை ரீதியான உள் விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி இல்லை என்பதை தன்னிச்சையாக நிருபிக்க வேண்டும். இல்லை என்றால் குற்றவாளி என்று முடிவு செய்யப்பட்டு, துறை ரீதியான தண்டனைக்கு ஆளாவார். இதை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. பணியில் இருக்கும் நபர்: நிர்வாகம் அப்படிபட்ட ஊழியரை, 'டெர்மினேஷன்' செய்யலாம். - வக்கீல் சண்முகம்: ரேஸ்கோர்ஸ்.:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை