மேலும் செய்திகள்
தடை செய்யப்பட்ட போதை வஸ்துகள் விற்பனை அதிகரிப்பு
18-Oct-2024
கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மாநகரில் 400க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகளில், கோவை மாநகர போலீசாரின் அனுமதியுடன், பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது.இந்நிலையில் சரவணம்ட்டி அஞ்சுகம் நகரில் உள்ள ஒரு மளிகை கடையில், பட்டாசு விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.விசாரணையில், அனுமதி இல்லாமல் பட்டாசு விற்பனை செய்தது தெரியவந்தது. பட்டாசு விற்பனை செய்த பெரியசாமி, 49 என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.கடையில் இருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
18-Oct-2024