எம்.எல்.ஏ., மீது வழக்கு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, வடுகபாளையம் ரயில்வே கேட்டை மூடக்கூடாது என வலியுறுத்தி நேற்று முன்தினம் எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில், அ.தி.மு.க., நகர செயலாளர் கிருஷ்ணகுமார், பொதுமக்கள் ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து, போத்தனுார் ரயில்வே போலீசார், தடை செய்யப்பட்ட பகுதியில் மக்களை திரட்டுதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில், எம்.எல்.ஏ., மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.