உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சி.டி.சி.ஏ. கிரிக்கெட்; கோவை நைட்ஸ் வெற்றி

சி.டி.சி.ஏ. கிரிக்கெட்; கோவை நைட்ஸ் வெற்றி

கோவை,; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.) முதலாவது டிவிஷன் போட்டி எஸ்.என்.எம்.வி., பி.எஸ்.ஜி. உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது. ஸ்ரீ ராமகிருஷ்ணா கிரிக்கெட் டிரஸ்ட் அணியும், கோவை நைட்ஸ் அணியும் மோதின. ராமகிருஷ்ணா அணி 39.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 136 ரன் எடுத்தனர். அபிநவ் 74 ரன் எடுத்தார். எதிரணியின் ஷாஜகான் 4 விக்கெட், செல்வகுமரன் 3 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து களம் இறங்கிய கோவை நைட்ஸ் அணி, 22.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு, 139 ரன் எடுத்து வென்றது. கிஷோர் 55 ரன், கார்த்திக் சங்கர் 41 ரன் எடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை