ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
கோவை; முதலிபாளையம் பகுதியில், தண்டவாள மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளதால், ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி, திருச்சி - பாலக்காடு டவுன் (16843) எக்ஸ்பிரஸ் வரும், 28 மற்றும், 30 ம் தேதிகளில் கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். பணிகள் நிறைவடைந்த உடன், இந்த ரயில் கரூரில் இருந்து பாலக்காடுக்கு, முன்பதிவற்ற சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.நாகர்கோவில் - கோவை(16321) எக்ஸ்பிரஸ் ரயில், வரும், 28, 30ம் தேதிகளில் கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். பணிகள் நிறைவடைந்த உடன், இந்த ரயில் கரூரில் இருந்து பாலக்காடுக்கு முன்பதிவற்ற சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.