உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போக்குவரத்தில் மாற்றம்; எதிர்பார்ப்பில் மக்கள்

போக்குவரத்தில் மாற்றம்; எதிர்பார்ப்பில் மக்கள்

போத்தனூர்; கோவை -- பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. சுந்தராபுரம் நான்கு ரோடு சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனை தவிர்க்க, யூ டர்ன் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. வாகனங்கள் சங்கம் வீதி, சாரதா மில் சாலைகள் வழியே சென்று பொள்ளாச்சி சாலையை அடைந்து, சிட்கோ நோக்கி செல்ல அறிவுறுத்தப்பட்டது. தற்போது அனைத்து வாகனங்களும் நேர்வழியில் இயக்கப்படுகின்றன. அதுபோல் மேற்குறிப்பிட்ட இவ்விரு சாலைகளும் ஒருவழி பாதையாக மாற்றப்பட்டன. மதுக்கரை மார்க்கெட் சாலைக்கு செல்லும் வாகனங்கள். எல்.ஐ.சி., காலனியில் திரும்பி ஹவுசிங் யூனிட் வழியே செல்லும் நிலை உள்ளது. இதனால், சில நூறு மீட்டர் தூரத்தில் உள்ள இடங்களுக்கு கூட, சுமார் ஒரு கி.மீ., தூரம் சுற்ற வேண்டிய நிலைக்கு மக்கள் ஆளாகியுள்ளனர். பிம்ஸ் மருத்துவமனை எதிரே மற்றும் காந்தி நகர் சாலை சந்திப்பு பகுதிகளில் வாகனங்கள் திரும்புவதில் பெரும் சிரமமாக உள்ளது. இவை அனைத்திற்கும் மேலாக, மக்கள் சாலைகளை கடக்க முடிவதில்லை. நான்கு ரோடு சந்திப்பு சிக்னலில், வாகன நெரிசலை கட்டுப்படுத்திய போலீசார், தற்போது காந்தி நகரில் அப்பணியை மேற்கொள்கின்றனர். அதற்கு பதிலாக மீண்டும் பழைய நடைமுறையான சிக்னல் முறையை அமல்படுத்தவேண்டும் என வாகன ஓட்டிகள், மக்கள் எதிர்பார்த்துள்ளனர். போலீஸ் கமிஷனர் மனது வைப்பாரா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை