மேலும் செய்திகள்
' ட்ரோன் ' ஆராய்ச்சி மையத்தில் கவர்னர் ரவி ஆய்வு
11-Jul-2025
அன்னுார்; 'இஸ்கான்' இயக்கம் சார்பில், அன்னுார், கரிவரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று முன்தினம் இரவு பகவத் கீதை குறித்த சொற்பொழிவு நடந்தது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சரவணன் வரவேற்றார்.'இஸ்கான்' அமைப்பின் மாவட்ட நிர்வாகி மது கோபால் தாஸ், பகவத் கீதை குறித்து பேசுகையில், கிருஷ்ண நாம ஜெபமே முக்திக்கு வழிவகுக்கும். தினமும் கிருஷ்ணர் நாமத்தை உச்சரிக்க வேண்டும். பகவத் கீதையின் சில பக்கங்களையாவது தினமும் வாசிக்க வேண்டும், என்றார்.இதையடுத்து, கிருஷ்ணர் பஜனை நடந்தது. நிகழ்ச்சியில் பக்தர்கள் மற்றும் ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் பங்கேற்றனர்.
11-Jul-2025