வேதியியல் தேர்வு கடினம் பிளஸ் 1 மாணவர்கள் வருத்தம்
அன்னூர்: 'வேதியியல் தேர்வு கடினமாக இருந்தது,' என பிளஸ் 1 மாணவர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர். பிளஸ் 1 பொது தேர்வு இறுதி நாளான நேற்று, வேதியல், கணக்குப்பதிவியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வு நடந்தது. வேதியியல் தேர்வு கடினம்
சிந்தனா, மோளகாளிபாளையம்: வேதியியல் பாடத்தில், 70 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதில் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கேள்விகள் கடினமாக இருந்தன. அதிக மதிப்பெண் பெற முடியாது. தேர்ச்சி பெறுவது எளிது
பிரியதர்ஷினி காளியாபுரம்: ஒரு மதிப்பெண் மற்றும் 2 மதிப்பெண் கேள்விகள் எளிதாக இருந்தன. மற்ற கேள்விகள் கடினமாக இருந்தன. பாடத்தின் உள்பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. தேர்ச்சி பெறுவது எளிது. ஆனால் சென்டம் பெற முடியாது. அதிக மதிப்பெண் பெறலாம்
அன்பு, அல்லிகுளம்: கணக்குப்பதிவியலில், 90 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதில் ஒன்று, இரண்டு, ஐந்து மதிப்பெண் கேள்விகள் எளிதாக இருந்தன. அதிக மதிப்பெண் பெறலாம். மூன்று மதிப்பெண் கேள்விகள் மட்டும் சற்று கடினமாக இருந்தன. பல கேள்விகள் ஆசிரியர் தெரிவித்ததில் வந்திருந்தது. பிளஸ் 1 பொதுத் தேர்வு நேற்று முடிவடைந்ததை அடுத்து மாணவ, மாணவியர் மகிழ்ச்சியுடன் தங்களுக்குள் பேசி கலைந்து சென்றனர்.