கிருஷ்ணர், ராதை வேடமிட்ட குழந்தைகள்
மேட்டுப்பாளையம்: காரமடையில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடும் விதமாக 120 குழந்தைகள் கிருஷ்ணன், ராதை வேடம் அணிந்து பள்ளிக்கு வந்தனர். கோவை மாவட்டம் காரமடையில் உள்ள எஸ்.வி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலையில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடும் விதமாக, பிரி.கே.ஜி., எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி.,யை சேர்ந்த 120 குழந்தைகள் கிருஷ்ணன், ராதை வேடம் அணிந்து பள்ளிக்கு வந்தனர். பின், கிருஷ்ணன் ராதை ஜோடிகளாக வலம் வரும் நிகழ்ச்சி, புட்பால் விளையாடும் கிருஷ்ணர், ராதைகளின் அழகான நடை, ஆட்டம் பாட்டம் என குழந்தைகள் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் பழனிசாமி, நிர்வாக அறங்காவலர் லோகு முருகன், முதல்வர் சசிகலா, செயலர் ராஜேந்திரன், பொருளாளர் ரத்தினசாமி, நிர்வாக அதிகாரி சதீஸ்குமார் மற்றும் அறங்காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.----