உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விராலியூரில் குழந்தைகளுக்கு ஆபத்து காத்திருக்கிறது; குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

விராலியூரில் குழந்தைகளுக்கு ஆபத்து காத்திருக்கிறது; குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

கோவை; கோவை தெற்கு கோட்டாட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்ப்புக்கூட்டம் நடந்தது. இதில் விவசாயிகள் பேசியதாவது:l மதுக்கரை தாலுகாவுக்குட்பட்ட ஓராட்டுக்குப்பையில், ஐந்துக்கும் மேற்பட்ட குரங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து துவம்சம் செய்கின்றன. இரவில் குடியிருப்புகளுக்குள் புகுந்து தொல்லை செய்கின்றன. குழந்தைகளை கடிக்கின்றன. பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.l பேரூர் தாலுகாவுக்குட்பட்ட விராலியூரில், சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது ஆடு, மாடு மற்றும் வீடுகளில் வளர்க்கும் நாய்களையும் கவ்வி சென்றுவிடுகிறது. குழந்தைகளை கவ்வி செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வனத்துறையினர் தடுக்க வேண்டும்.l கோவை பாலக்காடு சாலை மைல்கல்லில் இருந்து, மாதம்பட்டி வரை 11.5 கி.மீ.,தொலைவுக்கு மேற்கு புறவழிச்சாலைப்பணி நடந்து வருகிறது. இந்த சாலையை ஒட்டி சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் சர்வீஸ் சாலையில் தொடர்ச்சி இல்லை. அவற்றை இணைத்து, சாலையை முழுமையாக அமைத்துக்கொடுக்க வேண்டும். l காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த பலமுறை மனு கொடுத்தும், இது வரை ஒரு காட்டுப்பன்றியை கூட சுட்டுக் கொல்லவில்லை. இதற்காக போடப்பட்ட அரசு உத்தரவு அனைத்தும் வீண். இவ்வாறு, விவசாயிகள் பேசினர்.தமிழக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த பெரியசாமி கூறுகையில், ''மேற்குபுறவழிச்சாலை திட்டத்தில், விவசாயிகள் நலனுக்காக எந்த ஒரு உருப்படியான பணியையும் நெடுஞ்சாலைத்துறை மேற்கொள்ளவில்லை. இது அரசின் மீதும், அதிகாரிகள் மீதும் விவசாயிகளுக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது,'' என்றார். கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் கந்தசாமி, சூலுார், மதுக்கரை, பேரூர், கோவை தெற்கு தாலுகாக்களுக்குட்பட்ட தாசில்தார்கள், வனத்துறை, மின்வாரியம், குடிநீர் வடிகால், பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஒன்றிய, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.

நடவடிக்கை'

கோட்டாட்சியர் ராம்குமார் பேசுகையில், ''தாலுகா அலுவலகங்களில் ஒரு மாதத்துக்கு முன்பு ஜமாபந்தி நடந்தது. அதில் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களுக்கு, இன்னும் தீர்வு காணப்படாதது குறித்து ஏராளமான புகார்கள் வந்துள்ளன. மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, மனுதாரர்களுக்கும் பதில் அனுப்ப வேண்டும்,'' என்று அதிகாரிகளை அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை