மேலும் செய்திகள்
மாணவரிடம் வழிப்பறி தொழிலாளி கைது
04-Nov-2024
வெள்ளலுார், பசுபதி வீதியை சேர்ந்தவர் சிவக்குமார், 38. லோடு ஆட்டோ டிரைவர். இவர் தனது மனைவியுடன் வெள்ளலுார், கஞ்சிக்கோணாம்பாளையம் பகுதியில் தனது லோடு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர்களை பின் தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் சிவக்குமாரின் வாகனத்தை வழிமறித்து அவரிடம் இருந்து ரூ.2,500 பணத்தை பறித்து சென்றனர். இது குறித்து சிவக்குமாரின் மனைவி சாந்தி போத்தனுார் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். 22 கிலோ குட்கா பறிமுதல்
கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் போலீசார் நடத்திய சோதனையில் சுமார் 22 கிலோ குட்கா பொருட்கள் சிக்கின. மாநகரில் உள்ள பல பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தன. இதயைடுத்து போலீசார் நடத்திய சோதனையில், உக்கடம் புல்லுக்காடு பகுதியில் இருந்து 8.4 கிலோ, கவுண்டம்பாளையம் பகுதியில் ஒரு பெட்டிக்கடையில் இருந்து சுமார் ஒரு கிலோ மற்றும் சிங்காநல்லுார் காமராஜர் நகர் பகுதியில் உள்ள கடையில் இருந்து 12.5 கிலோ குட்கா பொருட்கள் சிக்கின. மேலும், குட்கா விற்பனையில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். குண்டர் சட்டத்தில் மூவர் கைதுஅன்னூர் அருகே நாரணாபுரத்தில் கடந்த 2ம் தேதி கல்லூரி மாணவர் யஷ்வந்த் குமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி, மூவர் தங்க கடுக்கன், மொபைல் ஆகியவற்றை பறித்துச் சென்றனர். போலீசார் விசாரித்து குன்னத்தூரைச் சேர்ந்த கோகுல், 26. வினோத்குமார், 30. சந்தோஷ், 27. ஆகிய மூவரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். விசாரணையில் மூவர் மீதும் ஏற்கனவே சில குற்ற வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கோவை ரூரல் போலீஸ் எஸ்.பி., கார்த்திகேயன் பரிந்துரையின் பேரில், கலெக்டர் கிராந்தி குமார் மூவரையும், குண்டர் சட்டத்தில் கைது செய்ய, உத்தரவு பிறப்பித்தார். குண்டர் சட்ட உத்தரவு நகலை, கோவை சிறையில் உள்ள மூவரிடமும் போலீசார் வழங்கினர்.
04-Nov-2024