உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடியிருப்பு பகுதியில் புகுந்த நாக பாம்பு மீட்பு

குடியிருப்பு பகுதியில் புகுந்த நாக பாம்பு மீட்பு

ஆனைமலை: ஆனைமலை அருகே வேடசந்துார் மதுரை வீரன் கோவில் குடியிருப்பு பகுதியில், புகுந்த ஐந்தடி நீள நாகபாம்பினை வனத்துறை மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுப்பகுதிகளில், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், பாம்புகள் உள்ளிட்ட விஷ பூச்சிகள் வெளியே வந்து குடியிருப்பு பகுதிக்குள் வருகின்றன.அதில், ஆனைமலை அருகே வேடசந்துார் மதுரைவீரன் கோவில் வீதியில், குணசேகரன் என்பவரது வீட்டில் பாம்பு ஒன்று இருப்பதாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, பாம்பு பிடி வீரர் சுரேஷ் சம்பவ இடத்துக்கு சென்று போராடி பாதுகாப்பாக ஐந்து அடி நீளம் உள்ள நாகப்பாம்பினை மீட்டார் பின்னர், ஆழியாறு வனப்பகுதியில் பாம்பு விடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை