உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை - காரைக்கால் நேரடி ரயில்; பயணிகள் சங்கம் கோரிக்கை

கோவை - காரைக்கால் நேரடி ரயில்; பயணிகள் சங்கம் கோரிக்கை

கோவை : போத்தனூர் ரயில் பயனாளர்கள் சங்கம் சார்பில், திருச்சி மண்டல ரயில்வே மேலாளருக்கு அளிக்கப்பட்ட மனு:கோவையில் இருந்து காரைக்காலுக்கு நேரடி ரயில் இயக்கப்பட வேண்டும் என்பது, கோவை மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், நீடாமங்கலம், திருவாரூர், நாகை, நாகூர், வழியாக, கோவையில் இருந்து காரைக்காலுக்கு இன்டர்சிட்டி ரயில் இயக்கப்பட வேண்டும் என, சேலம் கோட்ட மேலாளருக்கு ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.கடந்த காலங்களில், ஜனசதாப்தியில் தஞ்சாவூர் வரை பயணித்து, பின் அங்கிருந்து ரயில் எண் 06880 வாயிலாக காரைக்கால் பயணித்து வந்தோம். இந்த ரயிலின் நேரம் மாற்றப்பட்டுள்ளதால், மேற்கு மாவட்டப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே, காரைக்காலுக்கு நேரடி ரயில் இயக்கும்வரை, ரயில் எண் 06880 திருச்சியில் இருந்து காலை 10:50 மணிக்கு புறப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதனால், மேற்கு மாவட்ட பயணிகள் திருவாரூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, காரைக்கால் செல்ல வசதியாக இருக்கும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை