உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை மத்திய சிறை டி.ஐ.ஜி., இடமாற்றம்

கோவை மத்திய சிறை டி.ஐ.ஜி., இடமாற்றம்

கோவை: கோவை மத்திய சிறை டி.ஐ.ஜி.,யாக பணியாற்றி வந்த சண்முக சுந்தரம், இடமாற்றம் செய்யப்பட்டார்.தமிழகத்தில் உள்ள நான்கு சரக சிறைத்துறையில் டி.ஐ.ஜி.,க்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில் கோவை மத்திய சிறை டி.ஐ.ஜி.,யாக பணியாற்றி வரும், சண்முக சுந்தரம், வேலுார் சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தேனி மாவட்டத்தை சேர்ந்த சண்முக சுந்தரம், 2022ம் ஆண்டு திருச்சி சிறையில் இருந்து கோவை மத்திய சிறைக்கு டி.ஐ.ஜி.,யாக, பணியிட மாற்றம் பெற்று வந்தார். தற்போது, இவர் வேலுார் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இவருக்கு பதிலாக, திருச்சி சிறையில் பணியாற்றி வந்த ஜெயபாரதி கோவை மத்திய சிறை டி.ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு சில நாட்களில், ஜெயபாரதி பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை